2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் காட்டுப்பகுதியில்; இயங்கிவந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (28) தாம் முற்றுகையிட்டதுடன், கசிப்பு உற்பத்திக்கான பொருட்களையும் கைப்பற்றியதாக மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

அத்துடன், இந்த முற்றுகையின்போது சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை பிணையில் விடுவித்ததுடன், அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வாகரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

கசிப்பு உற்பத்திக்கான மூலப்பொருட்கள், 02 பரல்கள், 45 லீற்றர் கசிப்பு ஆகியவை முற்றுகையின்போது கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்திகளை தடுக்கும் வகையில் மதுவரித் திணைக்களம் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .