2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

வீதி விபத்தில் இரு சிறுவர் உட்பட 15பேர் படுகாயம்

A.P.Mathan   / 2011 மார்ச் 31 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு – கொழும்பு வீதியில் உள்ள ஆலங்குள சந்தியில் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்றும் வாழைச்சேனையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த மீன் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 15பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. வானில் பயணம் செய்த 2 சிறுவர் உட்பட 14 பேர் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்த சிறுவர்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வானில் பயணம் செய்தவர்கள் உம்றா கடமையினை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவிற்கு சென்று திரும்பியவர்களென தெரிய வருகிறது. இதேவேளை லொறியின் சாரதியும் படுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வானில் பயணம் செய்தவர்கள் கிழக்கு மாகாண சபையின் வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சர் உதுமா லெப்பையின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Pix: ஸரீபா


  Comments - 0

  • Osama Saturday, 02 April 2011 05:59 PM

    Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon.Stupid drivers.For money, no proper sleeping/rest for driving.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .