2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் கொள்ளைக் கோஷ்டி கைது

Super User   / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                      (ஜெளபர்கான், ரிபாயா நூர்)

நீண்ட  நாட்களாக  பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளை கோஷ்டியொன்றை காத்தான்குடி பொலிஸார் நேற்று முன் தினம் கைது செய்துள்ளனர்.

மூவர் கொண்ட இக்கொள்ளை கோஷ்டியினரிடமிருந்து ஒரு மோட்டார்  சைக்கிள், தங்கச் சங்கிலிகள் உட்பட பல பவுண் தங்கநகைகள், 35 ஆயிரம் ரூபாய் பணம், கையடக்க தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி  யு.எம்.அமரசிறி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அத்துடன் அன்றைய தினம் அடையாள அணி வகுப்பிற்கு உட்படுத்துமாறும் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

alt

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .