Super User / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
காத்தான்குடி நகர சபைக்கு தெரிவான புதிய தலைவர், பிரதி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர்.
நகர சபைக்கு சென்ற இவர்களை நகர சபையின் செயலாளர் மற்றும் அதன் உத்தியோகஸ்தர்கள் வரவேற்றதுடன் தலைவர் அஷ்பர் மற்றும் பிரதி தலைவர் ஜெஸீம் உறுப்பினர்களான பாக்கீர், சியாட், அலி சப்ரி, சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்த வைபவம் காத்தான்குடி நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நகர சபையின் செயலாளர் சலீம் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் றவூப் ஏ மஜீட் மற்றும் சுயேட்சைக்குழவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களான பொறியியலாளர் அப்துர் றஹ்மான், ஹாறூன் ஆகிய மூவரும் கலந்துகொள்ளாமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025