2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

ஆதிகோவிலடியில் மேலும் 16 பேருக்கு கொரோனா

Niroshini   / 2021 ஜூலை 26 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

வல்வெட்டித்துறை - ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இன்று முன்னெடுக்கப்பட்ட எழுமாறான அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 16 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இன்று 166 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே, 16 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டது.

வல்வெட்டித்துறை வடமேற்கு (ஜே388) கிராம அலுவலகர் பிரிவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராமத்தில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 940 பேர் வசிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .