2022 ஜனவரி 22, சனிக்கிழமை

மந்துவிலில் பெருமளவான வெடிபொருள்கள் மீட்பு

Niroshini   / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பு வெடிபொருள்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருள்கள், நேற்று (23)  மீட்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மந்துவில் வடக்கு, ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அவர்களால் பராமரிக்கப்பட்டு வந்த தென்னந்தோப்புக்குள் இருந்தே, இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. 

 இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவத்தினர் அப்பகுதியை முற்றுகையிட்டு தேடுதல் நடத்திய போதே , நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதன் போது, புலிகளின் தயாரிப்பான டாங்கி எதிர்ப்பு நிலக்கண்ணி வெடிகள், அம்மான் - 3,  23 மிதிவெடிகள், 3 கிளைமோர் குண்டுகள், ரி-56 ரக துப்பாக்கி மகஸின்கள், துப்பாக்கி ரவைகள்  உள்ளிட்ட பெருமளவான வெடிபொருள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X