2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

’வர்ணங்களில் மாற்றம் ஏற்படாது’

Niroshini   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் பொஸ்கோ பாடசாலை அருகிலுள்ள குளத்தின் வர்ணங்கள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதுடன், அதில் மாற்றங்கள் ஏற்படாது என, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்  இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில், இன்று (15) மதியம் நடைபெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர்  இதனை தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டதாக கூறப்படும் செயல் உண்மையெனில் அது கண்டிக்கப்பட வேண்டியது என்றார்.  

எமது மக்களை கவலைப்படுத்துகின்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .