2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

திலீபனுக்கு அஞ்சலி: கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு, இன்று (28) மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன், தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து, கடந்த 23ஆம் திகதியன்று, யாழ். மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந்ம், யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை பொலிஸார்; காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சபையில் நடைபெற்ற தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X