2023 ஜூன் 01, வியாழக்கிழமை

புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி

Freelancer   / 2023 மார்ச் 13 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி, இன்று (13) முன்னெடுக்கப்பட்டது. 

யாழ். போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும் 200ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் யாழ். பரியோவான் கல்லூரியுடன் இணைந்து இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. 

பரியோவான் கல்லூரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி, பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வந்தடைந்து, மீண்டும் பரியோவான் கல்லூரியைச் சென்றடைந்தது. 

இதில் கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், வைத்தியசாலை சமூகம் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .