Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 30 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வழங்கப்பட்ட எழுதாரகை பயணிகள் படகுச்சேவை 2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டது.
இதனால் ஊர்காவற்றுறை, காரைநகர், எழுவை தீவு, அனலைதீவு, நயினாதீவு வரையான சேவை இடம்பெறுவதில்லை. இதனால் இப்பயணிகள் படகுச்சேவையை பயன்படுத்தும் பயணிகள் கடும்
சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது சம்மந்தமாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்பணிப்பாளர் குரூஸிடம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் பிரஸ்தாபித்துள்ளர்.
இது சம்மந்தமாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக திட்டப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இச்சேவை எதிர்காலத்தில் காரைநகர் இறங்குதுறையிலிருந்து ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் தவிசாளரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டுக்கு முன்பு காரைநகர் துறைமுகத்திலிருந்து மேற்படி சேவைகள் கிரமமாக இடம்பெற்றுள்ளன.
அத்துடன், எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்துக்கும் காரைநகரிலிருந்து பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கவேண்டுமென தவிசாளர் பணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
40 minute ago
51 minute ago
2 hours ago