2021 ஜூலை 28, புதன்கிழமை

‘சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால் டெலோ அழுத்தம் கொடுக்கும்’

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் இருந்து சுமந்திரனை விலக்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, டெலோ முன்னின்று அழுத்தங்களைப் பிரயோகிக்குமென்று, டெலோவின் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில், இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுமந்திரனுக்கு அடிப்படையிலேயே போராட்டம், அதன் வலி, அதன் சுமை, தாக்கம், பெறுமதி பற்றித் தெரியாதெனவும் ஆயுதப் போராட்டம் ஏன், எதற்கு, யாரால் உருவானது என்றும் அவருக்குத் தெரியாதெனவும் கூறினார்.

இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்த சுமந்திரனைப் பதவி விலக்கும் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டால், அதற்குத் தமது கட்சி முன்னின்று அழுத்தங்களைக் கொடுக்குமெனத் தெரிவித்த விந்தன் கனகரத்தினம், தானும் ஒரு போராளி என்ற வகையில், வரலாறு தெரியாத சுமந்திரனைப் பதவி விலக அழுத்தங்களைக் கொடுப்பேனெனவும் கூறினார்.

“எனவே, முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த விடயம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதைப் பொறுத்து, எமது கட்சியின் நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துவோம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .