2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வேலிக்கு தீ மூட்டிய இளைஞர்கள் கைது

Niroshini   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

யாழ்ப்பாணம் - நவாலி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வேலிக்கு தீ வைத்த குற்றச்சாட்டில், இருவர், மானிப்பாய் பொலிஸாரால, நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவாலி தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் வேலி, வெள்ளிக்கிழமை (15) இரவு தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தது.

குறித்த வேலி சில நாள்களுக்கு முன்பே கட்டப்பட்டதாகும்.

இந்நிலையில், வேலிக்கு தீ வைத்தமை தொடர்பாக வீட்டு உரிமையாளரால், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 19 மற்றும் 21 வயதான இரு இளைஞர்களை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .