2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

திடீரென உயிரிழந்த வயோதிபருக்கு கொரோனா

Niroshini   / 2021 நவம்பர் 25 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன் 

உயிரிழந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட வயோதிபருக்கு, கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செங்கல்வரதராசா சக்திவேல் (வயது- 76) என்பவர், நேற்று (24), வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வைத்தியசாலையில்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று (25) பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X