2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

Niroshini   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் காணாமல்போன 6 வயது சிறுவன், நேற்று  (09) இரவு, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சங்கானை பகுதியை சேர்ந்த பார்த்திபன் ஸ்டிபன் என்ற சிறுவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்படுள்ளார்.

குறித்த சிறுவன், நேற்று 09), அயல் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது, திடீரென காணாமல் போனார்.

காணாமல்போன சிறுவனை தேடிவந்த பெற்றோர், இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று (09) இரவு,  குடீநீர் விநியோக குழாய் அமைக்க வெட்டப்பட்டிருந்த குழியில் தேங்கியிருந்த நீரில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், மானிப்பாய் பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .