Niroshini / 2021 ஒக்டோபர் 12 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இந்தியன் இழுவைபடகையும் தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை, எந்தவோர் அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என, பருத்தித்துறை, முனை கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நேற்றையதினம் (11), முனை கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே, இவ்வாறு அறிவித்துள்ளனர்.
அத்துடன், அரசியல் கட்சிகள், தமது அறிவித்தலை மீறி தமது இடத்துக்கு வரும் பட்சத்தில், மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாகவும், அப்பகுதி மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
அது மாத்திரமின்றி, தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால், தாங்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி, தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுவோம் எனவும், தெரிவித்துள்ளனர்.
10 minute ago
27 minute ago
41 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
27 minute ago
41 minute ago
57 minute ago