Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Niroshini / 2021 ஜூன் 09 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை திருடிச்சென்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் ஜன்னல் வழியாக நுழைந்த திருடர்கள். மடிக்கணினி, அலைபேசி மற்றும் சைக்கிள்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கமைய, குருநகர் மற்றும் சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்கள் மேலும் ஒரு வீட்டில் திருடிய குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களினால் திருடப்பட்ட இரண்டு மடிக்கணினிகள் , இரண்டு அலைபேசிகள் , இரண்டு சைக்கிள்கள்; மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago