2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

கஞ்சா திருட்டு: பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு

Niroshini   / 2021 ஜூன் 10 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று  பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து, போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடக்கப்பட்டு வருவதாக, பொலிஸ் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

குறித்த பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மீட்கப்படும் போதைபொருள்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர், அவற்றில் இருந்து பகுதியளவிலான போதைப்பொருளை திருடி, அவற்றை வெளியில் விற்பனை செய்து வருவதாகவும் இது நீண்ட காலமாக இடம்பெற்றுவருவதாகவும், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக, பொலிஸ் பொறுப்பதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த நான்கு பேருக்கும் எதிராக பொலிஸாரின் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .