2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

மின்சாரம் தடைப்பட்டதால் பறிபோன உயிர்

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மிருசுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 32 வயதான குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப் பட்டிருந்த நிலையில், புகையிரத  ஒளி சமிக்ஞை தடைப்பட்டிருந்தது. இதன் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

தவசிகுளம் கொடிகாமம் பகுதியினை சேர்ந்த சூசைநாதன் பிரதீபன் வயது (32 ) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .