2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

டிப்பரில் கடத்திச் செல்லப்பட்ட மூன்று இளைஞர்கள்

Freelancer   / 2022 ஜூலை 06 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யது பாஸ்கரன்

முல்லைத்தீவு  மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் , வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி,  அவர்களை  டிப்பரில் கடத்திச் சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

கடந்த வாரம் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கல்லாற்று பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை இளைஞர் குழு ஒன்று டிப்பரில் மூன்று இளைஞர்களையும் கடத்தி சென்ற வேளை விசுவமடு பகுதியில் பாலத்தில் மோதி டிப்பரின் டயர் வெடித்துள்ளது.

இதைத் தொடர்ந்து  டிப்பர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு இளைஞர்களை கடத்தி சென்றுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிஸார்  சென்ற வேளை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் டிப்பர் வாகனத்தினை விட்டு தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் மீட்டுள்ளனர். அவர்களை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

டிப்பர் வாகனம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்புபொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

 வாகனத்தின் உரிமையாளர் தொடர்பிலும் வாகன சாரதி தொடர்பிலும் புதுக்குடியிருப்பு பொலிஸார்   விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .