2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

காஸ் அடுப்புகளும் வெடித்து சிதறுகின்றன

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம் ,றொசாந்த் 

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது , காஸ் அடுப்புக்களும் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவம் நேற்றைய தினம் அம்பாறை, சாய்ந்தமருது பகுதியிலும் பதிவாகியிருந்தது.  அசம்பவத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் 6 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இன்று (28) புத்தளம் ஆராய்ச்சி கட்டுவ பகுதியிலும் சிலிண்டர் தீப்பிடித்திருந்தது. சிலிண்டரை நீர் நிலைக்குள் தூக்கி வீசியுள்ளனர். அதனால்,   பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டது எ  

இந்நிலையில், வடக்கில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 

கிளிநொச்சி திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு நேற்று (27) வெடித்து சிதறியிருந்தது , யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு இன்றைய தினம் வெடித்து சிதறியுள்ளது.

கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால் , அடுப்பு வெடித்து தீ பிடித்த போது பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .