2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

யாழ்.சிறுவன் கொழும்பில் நிர்க்கதி

Editorial   / 2021 ஜூலை 27 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

படத்தில் இருக்கும் சிறுவனை இனங்கண்டால், அதுதொடர்பில் அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

பகிரப்பட்டுள்ள அந்தத் தகவல்களின் பிரகாரம்,

படத்தில் இருக்கும் சிறுவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வேலை ஒன்றுக்காக அழைப்பிக்கப்பட்டுள்ளார். எனினும், அழைத்தவர்கள் அச்சிறுவனை வந்து அழைத்துச் செல்லவில்லை.

 இதனால், கடந்த இரண்டு வாரங்களாக தனியாக தவித்து கொண்டிருக்கின்றார். அச்சிறுவன் வீதியோரங்களில் தூங்கியே இரவுகளை கழித்துள்ளார்.

இந்நிலையில், அவருடைய ​பணப்பை, தேசிய அடையாள அட்டை மற்றும் அலைபேசி ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X