2023 ஏப்ரல் 01, சனிக்கிழமை

யாழ். மாவட்ட மக்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2023 ஜனவரி 27 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்கள் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ்.தலைமை  பிரதம பொறியியலாளர்  தெரிவித்துள்ளார்.

துண்டிக்கப்படும்  சந்தர்ப்பத்தில் 3, 250 ரூபாய் மீள்இணைப்பு கட்டணம் அறவிடப்படுவதோடு 6 மாத காலத்துக்கு மேலாக மின்துண்டிப்பு செய்யப்பட்டும் நிலுவை செலுத்தப்படாத பாவணையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மின்சார கட்டணம் செலுத்தாது  நிலுவை உள்ள பாவணையாளர்கள்  உடனடியாக மின்சார கட்டண நிலுவையை செலுத்தி மின்சார துண்டிப்பை தவிர்க்குமாறு பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .