2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

இணக்கசபை உறுப்பினரை தாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

இணக்கசபை ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற விசாரணையின் போது, இடையில் புகுந்து, அடாவடியில் ஈடுபட்டு, இணக்க சபை உறுப்பினரை தாக்கிய இளைஞனை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம், செவ்வாய்க்கிழமை(20) உத்தரவிட்டார்.

கடந்த ஞாயிற்றுகிழமை (18) கரவெட்டி பகுதியில்இடம்பெற்ற இணக்கசபை விசாரணையின் போதே இச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இது தொடர்பில் காயங்களுக்கு உள்ளான இணக்கசபை உறுப்பினர், நெல்லியடி பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, துன்னாலை பகுதியினை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .