2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

முத்தம் கொடுத்த இளைஞனுக்கு பிணை

Gavitha   / 2016 ஜூலை 25 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

பெண்ணொருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததுடன், அப்பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம்கொடுத்த குற்றச்சாட்டில் கைதான தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனை, மல்லாகம் மாவட்ட பதில் நீதவான் என்.தம்பிமுத்து, 50 ஆயிரம் ரூபாய் சரீரரப்பிணையில் செல்லுமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, சனிக்கிழமை தோறும் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடுமாறும் அவ்விளைஞனுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

தெல்லிப்பழை மணல்குளம் பகுதியில் இச்சம்பவம் சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்படி இளைஞனை பொலிஸார் கைதுசெய்ததுடன் ஞாயிற்றுக்கிழமை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .