2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

3 வாகனங்கள் முட்டி மோதியதில் மூவருக்கு காயம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

ஆடியபாதம் வீதி, மருத்துவபீடத்துக்கு முன்பாக வியாழக்கிழமை (01) மோட்டார் சைக்கிளொன்று, சிறியரக வாகனத்துடன் மோதி, அருகில் பயணித்த பிறிதொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு இளைஞர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், சிறியரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி தள்ளப்பட்டு, அருகில் வந்துகொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இதில், மாற்றுத்திறனாளியின் செயற்கைக்கால் உடைந்துள்ளதுடன் அவருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இரண்டு இளைஞர்களுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .