2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

14 வயது மாணவி கடத்தல்; இளைஞன் கைது

Freelancer   / 2023 மார்ச் 19 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

காதலிப்பதாகக் கூறி 14 வயது மாணவியை கடத்திச் சென்ற இளைஞனை, தெல்லிப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மேற்படி பாடசாலை மாணவியை காதலிப்பதாகக் கூறி, அப்பகுதியை சேர்ந்த இளைஞன், முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். 

பாடசாலைக்குச் சென்ற மாணவியைக் காணவில்லை என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்ததை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

இந்நிலையில், மாணவி புதுக்குடியிருப்பு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கு விரைந்த பொலிஸார், மாணவியை மீட்டதுடன், மாணவியைக் கடத்திச் சென்ற குற்றத்தில் இளைஞனையும் கைது செய்தனர். 

மீட்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , கைது செய்யப்பட்ட இளைஞனை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .