Super User / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யுத்த நிலைமை காரணமாக வடமராட்சி கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை பலாலி படைத் தலைமையகத்தில் இது தொடர்பாக நடைபெற்ற சந்திப்பில் யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் தலைமையிலான குழுவினரிடம் இதற்கான உறுதிமொழியை வழங்கினார்.
முதற்கட்டமாக அம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 81 குடும்பங்கள் நாளை திங்கட்கிழமை அங்கு மீளக்குடியமர்த்தப்படவுள்ளன.
செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 2ஆயிரத்து 455 குடும்பங்களைச் சேர்ந்த 7ஆயிரத்து 531 பேரை மீளக் குடியமர்த்துவதற்கான அனுமதியை நேற்று யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி வழங்கியுள்ளார்.
அத்துடன் இப்பிரதேசத்துக்கான மீள்கட்டுமானப் பணிகளை யாழ்.மாவட்டச் செயலகத்தை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இப்பிரதேச மக்களுக்காக இராணுவத்தினரால் 75 'அரை நிரந்தர' வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
மேலும் மருதங்கேணி வைத்தியசாலை, பாட சாலைகள், கோயில்கள், கூட்டுறவுச் சங்கங்கள், திணைக்களங்கள் என்பனவற்றை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025