2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச்சேவை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக திருத்தப்படாது காணப்பட்ட இப்படகு, மீண்டும் திருத்தப்பட்டு இன்று முதல் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ளது.

நெடுந்தீவு – குறிகாட்டுவான் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள்,  இப்படகுச்சேவை குறித்து யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் அண்மையில் மகஜரொன்றை கையளித்திருந்தனர். இதனையடுத்தே இப்படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .