2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

25 ஆடுகளுடன் இருவர் கைது

Niroshini   / 2021 நவம்பர் 25 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் 25 ஆடுகளை ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆடுகள், இன்று (25), சிறிய வாகனமொன்றில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாகவும், கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு ஆடுகள் கொண்டு செல்வது தொடர்பில், கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இதன் அடிப்படையில், நீர்வேலிப் பகுதியில் வைத்து, குறித்த வாகனம் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் ஆடுகளை ஏற்றி சென்றமை  கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்,  கெக்கிரிகொல்லாவா பகுதியை  சேர்ந்தவர்கள் என, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X