2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

அடம்பிடிக்கும் குழந்தைக்கு உணவூட்டுவது எப்படி?

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 மாதங்கள் சுமந்து சிசுவைப் பிரசவிப்பதை விட அதிக வேதனையை, அந்தச் சிசு வளர்ந்து, உணவு உண்ணும் வயதை அடைந்தவுடனேயே தாய்மார் அனுபவிக்கின்றனர். அந்தக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டிவிடுவதில் அவர்கள் படும் வேதனையே, இந்த நிலைமைக்குக் காரணமாகும்.

2018ஆம் ஆண்டின் இறுதியில், 7-8 மற்றும் 10-12 வயதுக்கு இடைப்பட்ட 100 சிறுவர்களைக் கொண்டு, ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இக்குழந்தைகள் வெவ்வேறான முறைகளில் உணவுகளையே ஏற்றுக்கொள்கிறார்களென, ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

விருப்பமில்லாததெனினும், கண்டிப்பாக உண்ணவேண்டிய போசனைமிக்க உணவுகளை வழங்கியே ஆகவேண்டும் என்கிற சந்தர்ப்பத்தில்தான், குழந்தைகள் - உணவு என்ற
உணவு வகைகளைப் பிரித்து, விசேடமாக மரக்கறி, பழ வகைகளைக் குழந்தைகளுக்குப் பெற்றுக்கொடுப்பதால், அக்குழந்தைகள் அவற்றை உண்பதற்குப் பழகிவிடுவரென பெற்றோர் கருதுகின்றனர்.

மேற்படி ஆய்வின்போது, 3 வேளை உணவுக்காக தெரிவு செய்யப்பட்ட மாதிரி உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. அந்த உணவுகள், கீழே உள்ளவாறு ஒரே தட்டில் வெவ்வேறாகவே வைத்து பரிமாறப்பட்டன.

1. ஒன்றையொன்று ஒட்டாத வகையில், ஒவ்வொரு உணவும் (மரக்கறி, பழங்கள், தானியங்கள்) வெவ்வேறாக வைக்கப்பட்டுப் பரிமாறப்பட்டன.
2. ஒரு உணவுடன் மற்றுமொறு உணவைக் கலந்து பரிமாறப்பட்டன.
3. சகல உணவுகளையும் ஒன்றாகக் கலந்துப் பரிமாறப்பட்டன.

இதன்போது, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட அனைத்துப் பெண் குழந்தைகளும், உணவு வகைகளை வெவ்வேறாகப் பரிமாறுவதில் அலாதி விருப்பமுடையவர்களாக இருந்தனரென்பது கண்டறியப்பட்டது. இதேவேளை, ஆண் குழந்தைகள் அதாவது, 7-8 வயதுக்கு இடைப்பட்டவர்கள், தமக்கு பரிமாறப்படும் உணவு வகைகள் குறித்து எவ்வித அக்கறையும் இல்லாமல் இருந்துள்ளன. எனினும், 10-12 வயதுக்கு இடைப்பட்ட ஆண் குழந்தைகள், பெண் குழுந்தைகளைப் போன்றே, வெவ்வேறாக்கப்பட்ட உணவுகளை உண்பதில் அதிக ஈடுபாட்டுடன் இருந்துள்ளனர்.

இதற்கமைய, வெவ்வேறாக உணவுகளைப் பரிமாறினால், அவற்றை உண்பதிலேயே குழந்தைகள் விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்பது, ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக, ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சில வேளைகளில் எல்லா உணவுகளும் ஒன்றாக இருப்பதால், அவை பழுதடையக் கூடுமெனக் குழந்தைகள் நினைக்கலாம். அவ்வாறு இல்லையெனில், அந்த உணவுகள் வெவ்வேறாக பரிமாறப்படும் போது, அவற்றை அடையாளம் கண்டுக்கொள்வது இலகுவென்றும் அவர்கள் கருதலாம்.

எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளுக்கமைய, சிறு வயது குழந்தைகளுக்கு, வெவ்வேறாக உணவு வகைகளைப் பரிமாறுவது தகுந்த முறையெனஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .