2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தால் சேதனப் பசளை கையளிப்பு

Editorial   / 2021 நவம்பர் 28 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஹலீம்

இலங்கை இராணுவத்தின்  விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புப் பிரிவினால் உற்பத்தி செய்யப்பட்ட 91 ஆயிரம் கிலோகிராம் கொண்ட சேதனப் பசளை, லக்பொஹர நிறுவனத்திடம், திருகோணமலையில் வைத்து நேற்று (27) உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.

சேதன விவசாயத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர டி சில்வாவினால் தலைமையில், இவ்வாறு சேதனப் பசளை கையளிக்கப்பட்டது.

இவ்வேலைத் திட்டம், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் முதல் கட்டமாக 93 ஆயிரம் கிலோகிராம் சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட்டு, உரிய  நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை இராணுவத்தின் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரிவினரால் 25,000 மெற்றிக் தொன் சேதன பசளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லக்பொஹர நிலையங்கள் ஊடாக இச்சேதனப் பசளையை, விவசாயிகள் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக லங்கா லக்பொஹர நிறுவனத்தின் கிழக்கு மாகாண பிரதேச முகாமையாளர் தம்மிக ரட்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம்  சேதனப் பசளையின் விலை 15 ரூபாய் தொடக்கம் 25 ரூபாய் விலை வீச்சிடையே விற்பனை செய்வதற்கு  உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .