2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

’முஸ்லிம்களை சீண்டுவது வழமையாகிவிட்டது’

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 02 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

நாட்டில் சுமூகமான நிலைமைகள் ஏற்படுகின்ற போது, முஸ்லிம்களை சீண்டுவது வழமையாகிவிட்டதென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம். மஹதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (02) வெளியிட்டுள்ள  அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுமூகமானதொரு நிலைமை ஏற்பட்டு, நாடு வழமைக்கு திரும்புகின்ற போது, அடிப்படைவாதம், இனவாதம் மற்றும் மதவாதம் போன்ற சொற்பதங்களால் முஸ்லிம்கள் மீது அவதூறுகள் உண்டாக்கப்படுகின்றன.

“அதன் பெயரால் முஸ்லிம்களின் பொருளாதாரம், சொத்துக்கள், உயிர்கள் அழிக்கப்படுவது அவ்வப்போது அரங்கேற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

“அந்த வகையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து இலங்கையிலும் அடிப்படைவாதம், மதவாதம் வளர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும், தப்லீக் ஜமாஅத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளரால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் சமூகத்துக்கு மாபெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

“கொரோனா அனர்த்தம் காரணமாக  பொருளாதாரமும் மக்களும் பாதிக்கப்பட்டு, நாடு அவதிப்படுகின்ற இத்தருணத்தில் இவ்வாறான கருத்துகள் அவரால் வெளியிடப்பட்டிருப்பது பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது.

“இந்த நேரத்தில், இவ்வாறான சொற்பதங்களால் பெரும்பான்மை சமூகம் ஆசுவாசப் படுத்தப்பட்டு, மீண்டுமொரு அழிவுக்கு இந்நாட்டையும் மக்களையும் கொண்டு செல்ல வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு விடக்கூடாது.

“எனவே, இது குறித்து பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X