2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

இராஜாங்க அமைச்சரின் கந்தளாய் விஜயம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கு மகாவலி வலயங்கள் சார்ந்த கால்வாய்கள் மற்றும் குடியிருப்புகளின் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் சிறிபால கம்லத் விஜயமொன்றை, நேற்று (18) மேற்கொண்டிருந்தார்.

மகாவலி  டி குளத்துக்குச் சொந்தமான கந்தளாய்  சூரியபுரா விவசாயக் பகுதியில், நீர்ப்பாசன செழிப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கபடவுள்ள  4 அணைக்கட்டுகளை அவர் திறந்து வைத்தார்.

 கந்தளாய் ஜனரஞ்சன ஒயா, ஹலம்பா ஒயா, கிபுல் குளம், எகோடோ ஒயா போன்ற அணைக்கட்டுக்கள் 22 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளன.

இத்திட்டங்கள் அனைத்தும் மூன்று மாதங்களில் நிறைவு செய்யப்படவுள்ளன. இத்திட்டங்கள் மூலம் சுமார் 700 குடும்பங்கள் பயனடையவுள்ளன.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  கபில நுவான் அத்துகோரள, பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர்  அமர கீர்த்தி அத்துகோரள, மகாவலி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X