2023 ஜூன் 07, புதன்கிழமை

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் சிக்கினார்

Freelancer   / 2023 மார்ச் 25 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொமைன், கோணேசபுரி பகுதியில் உள்ள வீட்டின் பின்புறம் பயிரிடப்பட்டிருந்த 08 கஞ்சா செடிகள் (உயரம் 08 அங்குலம் முதல் 05 அடி வரை) மற்றும் 1 கிலோ 361 கிராம்  காயவைத்த கஞ்சா செடிகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில், சந்தேகத்தின் பேரில் திருகோணமலை- பாலையூற்று  முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த   41 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட வீட்டில் Resident Of Fernando என்ற தங்குமிடம் இயங்கி வந்ததாகவும், மேற்குறிப்பிட்ட சந்தேக நபர் மட்டுமே இங்கு இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை  போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் 54 (அ) பயிர்ச்செய்கை மற்றும் கஞ்சா போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றங்களின் கீழ் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .