2023 ஜூன் 04, ஞாயிற்றுக்கிழமை

யோகா தரும் யோகம்; பத்மாசனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருள்:

பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது.  

செய்முறை:

1. விரிப்பில் அமர்ந்து இரண்டு கால்களையும் நேராக நீட்ட வேண்டும்.
2. இடது கையால் வலது கால் பெருவிரலை பிடித்து, இடது தொடையின் மேல் வைக்க வேண்டும்.
3. இடது காலின் பெருவிரலை பிடித்து, வலது தொடையில் வைக்க வேண்டும்.
4. இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்க வேண்டும்.
5. முதுகு நேரான நிலையில் இருக்க வேண்டும்.
6. சிறிது நேரத்திற்கு பின் மெதுவாக விலக்கி, கால்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பலன்கள்:
1. தியான நிலைக்கு சிறந்த ஆசனம்.
2. கூன் பிரச்னை விலக்கப்படும்.
3. தொடைகளில் அதிகப்படியான சதை குறையும்.
4. பிராணாயாம பயிற்சிக்கு இந்த ஆசனம் சிறந்தது.
5. அடிவயிறு சம்பந்தப்பட்ட பிரச்னை விலகி, வயிறு லேசாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .