2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

'சிங்கப்பூரின் தந்தை' காலமானார்

A.P.Mathan   / 2015 மார்ச் 23 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சிங்கப்பூரின் தந்தை' என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ, இன்று அதிகாலை 12.48 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் அதிகாலை 3.18) காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ குவான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ குவான் யூ, 31 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர், பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.

கடந்த பல வாரங்களாக நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இன்று அதிகாலை, அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

இறுதிச் சடங்குகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X