2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

அருட்சகோதரி நிர்மலா மறைவு

George   / 2015 ஜூன் 23 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னை திரேசா நிர்மாணித்த அறக்கட்டளையை நிர்வகித்து வந்த அருட்சகோதரி நிர்மலா ஜோஷியின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை(23) தனது 81ஆவது வயதில் காலமான அருட்சகோதரி நிர்மலா ஜோஷியின் திடீர் மரணம், அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள மோடி, கொல்கத்தா மட்டுமல்ல உலகமே உங்களை இழந்து தவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். 

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏழை, எளியவர்களின் நலனுக்காக தன்னையே அற்பணித்துக்கொண்டவர் நிர்மலா என்று கூறியுள்ளார். சகோதரி நிர்மலாவை இழந்து வாடும் மிஷனரீஷ் ஒப் சாரிட்டி குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் மோடி கூறிப்பிட்டுள்ளார். 

1934ஆம் ஆண்டு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவரான நிர்மலா, பாட்னாவில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் கல்வி பயின்றார். அதன்பின் அன்னை திரேசாவை பற்றி கேள்விப்பட்டதும் அவரை போன்று சேவை செய்ய முடிவெடுத்தார். 

இதையடுத்து ரோமன் கத்தோலிக்கராக மதமாற்றம் செய்துகொண்ட அவர், தெரேசா நிறுவிய அன்பின் பணியாளர் சபையில் தன்னை இணைத்துக்கொண்டார். 1997ஆம் ஆண்டு தெரேசாவின் மறைவுக்கு பின், அன்பின் பணியாளர் சபை தலைவராக அருட் சகோதரி நிர்மலா ஜோஷி பொறுப்பேற்றார். 

2009ஆம் ஆண்டு அவரது சேவையை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. சிலகாலம் உடல்நலம் குன்றியிருந்த சகோதரி நிர்மலா நேற்று தனது 81ஆவது வயதில் கொல்கத்தாவில் காலமானார். 

தற்போது அன்பின் பணியாளர் சபையின் தலைவராக ஜெர்மனியை சேர்ந்த மேரி பிரேமா பியரிக் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X