Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2021 ஜூலை 27 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் கடத்தல்கள், சிறுவர் தொழிலாளர்கள், சிறுவர்களை துஸ்பிரயோகப்படுத்துபவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பணியாற்றாதென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு தொடர்ந்து கருத்துரைத்த அவர், சிறுவர்களுக்கு எதிரான அனைத்துத் துன்புறுத்தல்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தனியானக் கட்சி என்கிற போதிலும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பாராளுமன்றத்தில் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு கட்சிகளுடன் பல விடயங்கள் தொடர்பில் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்பட்டுள்ளதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், அந்த விடயம் நீதிமன்றில் நிரூபிக்கப்பட வேண்டும் என்றார்.
சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள், எவ்வாறானப் பதவிகளில் இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
15 minute ago
20 minute ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
3 hours ago
6 hours ago