2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ஹல்துமுல்லயில் கவிழ்ந்தது பௌசர்

Freelancer   / 2023 மே 06 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

கொழும்பில் இருந்து ஹப்புத்தளை நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று சனிக்கிழமை (06) அதிகாலை 2.30 மணியளவில் ஹல்துமுல்ல பத்கொட பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் பௌசர், வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, காயமடைந்த குறித்த எரிபொருள் பௌசரின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தினால், குறித்த டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .