2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பண்டாரகமவில் பரபரப்பு; கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

Nirosh   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம வல்கம சுனாமி வீட்டுத் திட்டப் பகுதியில் மக்கள் பெருமளவு கூடியிருந்த நிலையில் இளைஞர்கள் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்களது கைகள் வெட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இத்தாக்குதலில் ஒரு இளைஞரின் இரு கைகளும் துண்டாடப்பட்டுள்ளதாகவும், மற்றொரு இளைஞரின் இடது கையில் மாத்திரம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட நபரே இவ்வாறு கொடுரூரமான முறையில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .