Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 மே 12 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் எண்ணிக்கை, இலங்கையிலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில், அதனைவிடவும் அதிகரித்துகொண்டே செல்கின்றது.
மின்மயானங்களில் எரியூட்டுவதற்காக, பல நாள்களாக சடலங்கள் வைக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும் இந்தியாவில் இடம்பெறாமல் இல்லை.
வீதியோரங்களில் மயங்கி விழுந்து மரணிக்கும் சம்பவங்களுக்கும் அங்கு குறைவில்லை. இந்நிலையில், இலங்கையில் பிடிக்கப்பட்ட படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
வீதியோரத்தில் மயங்கி விழுந்த முதியவர், மரணமடைந்துவிட்டார். அவரது உடல் போர்த்தப்பட்டிருக்கின்றது. இந்தப் படம், கடவத்தை- கிரிலவல எனுமிடத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 1,429 பேர், இன்றையதினம் இலங்கையில் இனங்காணப்பட்டனர். தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 132,527ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago