J.A. George / 2022 ஜனவரி 12 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த வருடம் இலங்கைக்கு 786 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், அரசுக்கு சொந்தமான பல நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின்துணைத் தலைவர் ஷிக்சித் சென் கூறியுள்ளார்.
மேலும், நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் வெற்றியை ஷிக்சிட் சென் பாராட்டியுமுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .