2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

பாடசாலைகள் திறப்பு தொடர்பில் வெளியான தகவல்

J.A. George   / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என,  கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

 80 சதவீதமான ஆசிரியர்களுக்கு தற்போது முலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .