Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 26 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரச நிதி ஸ்தீரமான நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது என்றும், இதன்படி நாடு முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது எனவும்” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளை சட்டங்கங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” யாகூ பைனஸ் இணையத்தளத்தில் எமது நாடு ஆசியாவில் வறுமை நாடுகளின் பட்டியலில் 20 நாடுகளிடையே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அறிக்கையொன்றாக அது வெளியிடப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நாங்கள் 2023 ஆம் ஆண்டில் இருக்கின்றோம். அந்த நிலைமையை விடவும் கடினமான நிலைமையில் இருந்து மீண்டு வருகின்றோம். இப்போது நாங்கள் முன்னேற முயற்சிக்கின்றோம். இருந்த நிலைமையை விடவும் முன்னெறியுள்ளோம்.
நாங்கள் அரச நிதி ஸ்தீரமான நிலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு படியாக ஏறி வருகின்றோம். நாங்கள் இப்போது முன்னேற்றகரமான பாதையில் பயணிக்க ஆரம்பித்துள்ளோம் என்றார்.
36 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago