2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

சிட்டைகளை பரிமாறி இருவரும் வெளியேறினர்

Niroshini   / 2018 மார்ச் 23 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

சிட்டைகளினூடாக தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே நேரத்தில் சபையை விட்டு வெளியேறிய சம்பவமொன்று, நேற்று (22) இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரும், பிரதமரும் தங்களுடைய ஆசனங்களில் இருந்தவாறு, சைகை காட்டிக்கொண்டிருந்தனர் அதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், சிறிய கடிதாசியொன்றில் என்னமோ எழுதி, சபையின் பணியாளரூடாக, பிரதமருக்கு அனுப்பிவைத்தார்.

அதனைப் பெற்றுக்கொண்டு, வாசித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், பதிலுக்கு ஏதோவொன்றை எழுதி, அதே பணியாளரிடம் அனுப்பிவைத்தார்.

பதிலைவாசித்த சம்பந்தன், சைகையில் ஏதோ கூறினார். அதன்பின்னர், இருவரும் ஒரேநேரத்தில் சபையை விட்டு வெளியேறிவிட்டனர். அதன்பின்னர் மீண்டும் சபைக்கு வருகைதரவே இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X