2021 ஜூலை 31, சனிக்கிழமை

நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இதய அறுவை சிகிச்சை

Super User   / 2010 மார்ச் 19 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில், மிக பிரபலமானவர் கவுண்டமணி. நகைச்சுவை நடிப்பில், தனி முத்திரை பதித்தவர். 73 வயதான அவருக்கு, சர்க்கரை நோய் இருந்து வந்தது.

ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தபோது, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பல பெரிய பட வாய்ப்புகளைக் கூட மறுத்துவிட்டார். நீண்ட இடைவெளிக்குப்பின், சரத்குமார் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஜக்குபாய் படத்தில் நடித்திருந்தார்.

கவுண்டமணிக்கு கடந்த சில நாட்களாக தோள் பட்டையிலும், கழுத்திலும் வலி இருந்து வந்தது. இதற்காக அவர் கழுத்து பட்டை அணிந்து இருந்தார். கடந்த 15ம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுண்டமணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதற்காக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று முன் தினம் அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கவுண்டமணிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .