2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கையர் 34 பேரிடமும் விசாரணை

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில், கனடா செல்ல தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கைத் தமிழர்கள் மங்களுர்வில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களில்  நால்வரை  மங்களூர் தனிப்படை பொலிஸார் வேதாளை கடற்கரைக்கு அழைத்து வந்து, நேற்று (20) விசாரணை செய்தனர். மேலும், தமிழகத்துக்குள் ஊடுருவிய இலங்கைத் தமிழர்கள், தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர், தலைமறைவானதால் அவர் குறித்தும்
மங்களூர் தனிப்படை பொலிஸார் மரைக்காயர்பட்டிணத்தில் தீவிர விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 34 பேர், சட்டவிரோதமாக கனடா செல்வதற்காக, புத்தளம் கடற்கரையில் இருந்து கடந்த மாதம் 27ஆம் திகதி புறப்பட்டனர்.
அவர்கள், மறுநாள் அதிகாலை இராமநாதபுரம் மாட்டம் இராமேஸ்வரத்தை அடுத்துள்ள வேதாளை  கடற்கரையை வந்து சேர்ந்தனர்.

பின்னர் வேதாளையில் இருந்து  மங்களூர் சென்று கடல் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது,  இம்மாதம் 11ஆம் திகதி மங்களூர் பொலிஸாரால் 34  இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 34 இலங்கை தமிழர்களில் நான்கு பேரை மட்டும் பொலிஸ் காவலில் எடுத்த மங்களூர் பொலிஸார் அவர்களிடம் இருந்து  முக்கிய ஆவணங்களைத் திரட்டுவதற்காக விசராணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .