2022 நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையரை மீள அழைக்க வேண்டும்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் தவறினால் அவர்களை மீள அழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து அவர் மேலும் தெரிவித்ததாவது, சந்தேக நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இவ்வாறான கொடூரக் கொலைகளை மன்னிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

2019 ஏப்ரலில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் போது, இலங்கையும் மத கடும்போக்குவாதத்தை எதிர்கொண்டதாகவும், இது சமூகத்தை பெரிதும் உலுக்கியது என்றும் கூறினார்.எந்தவொரு தனிநபரும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பலியாகிவிடக் கூடாது எனத் தெரிவித்த அவர், இலங்கையர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் தொடரக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

உள்நாட்டில் மத கடும்போக்குவாதிகள் தலைதூக்குவதுடன், கடும்போக்குவாதத்தைச் சேர்க்கின்றனர் என்ற அவர், இது அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கப்பட வேண்டும், தோற்கடிக்கப்பட வேண்டும், முறியடிக்கப்பட வேண்டும் என்றார்.


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X