2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பவளவிழா

Editorial   / 2018 மார்ச் 22 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காப்பியக்கோ, டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பவளவிழா, இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏற்பாட்டில், சென்னை, எழும்பூர் ‘வெஸ்டின் பார்க் ஹோட்டலில், நாளை (17) மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் காப்பியக்கோ எழுதி, அறிவியல் அறிஞர் வெள்ளம்ஜீ எம்.ஜே.முஹம்மது இக்பால் பதிப்பித்து வெளியிடும் “அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்” எனும் காவியமும் வெளியிடப்படவுள்ளது.

விழாவில், சித்திலெப்பை ஆய்வு மன்றத் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா, உபதலைவர் டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், பொதுச்செயலாளர் பொறியியலாளர் நியாஸ் ஏ.ஸமத், பொருளாளர் சட்டத்தரணி முஹம்மத் பைஸல் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும், சித்திலெப்பை ஆய்வு மன்றம் இவ்வருட நடுப்பகுதியில் நடத்தத் தீர்மானித்துள்ள “தேசிய மாநாடு 2018” சம்பந்தமாகவும் தமிழ்நாட்டு அறிஞர்களுடன் கலந்துரையாடப்படவுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ந் திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ள சித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் “முஸ்லிம் தேசியம்” – எழுச்சி மாநாட்டில் பேராசிரியர், முனைவர் சேமுமு முகமதலி சிறப்புச் சொற்பொழிவு ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .