2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

Freelancer   / 2022 நவம்பர் 24 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

மண்ட தீவு பகுதியில் உள்ள அட்டைப்பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வண்ணாங்கேணி பளை பகுதியை சேர்ந்த தவராச நிதர்சன் வயது 21 என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் மண்டை தீவு பகுதியிலுள்ள அட்டைப் பண்ணையில் கடந்த காலமாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .